செய்திகள்

ஏதிர்க்கட்சித் தலைவர் பிரச்சினையைத் தீர்க்க சபாநாயகரை நாட தீர்மானித்துள்ள சுசில்

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான பிரச்சினைக்;கு தீர்வு காணுவதற்கு சபாநாயகரிடன் யோசனையை பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு செயலாளர் சுசில் பிரேமஜயந்த தீரமானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சி தொடர்பான பிரச்சினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரச்சினையெனவும் இதனால் அது தொடர்பாக கட்சிக்குள் கலந்துரையாடி தீர்த்துக் கொள்ளுமாறு கூட்டமைப்பு செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடந்த வாரத்தில் சபாநாயகர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த பிரச்சினைக்கு தீர்வு காணுவது முடியாத காரியமாக இருப்பதாகவும் இதனால் சபாநாயகரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கு சுசில் பிரேமஜயந்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏதிர்க் கட்சி தலைவராகும் தகுதி தினேஸ் குணவர்தனவுக்கே இருப்பதாகவும் இதனால் அவரை அந்த பதவிக்கு நியமிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 58 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய கடிதமொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே அந்தப் பதவி கிடைக்க வேண்டுமென இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.