செய்திகள்
நாளை மகிந்த பதவியேற்கிறார்
பிரதமராக மகிந்த ராஜபக்ஷ மீண்டும் நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார்.
இதற்கான நிகழ்வு நாளை காலை 8.30 மணியளவில் களனி ரஜமகா விகாரையில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதேவேளை புதிய அமைச்சரவை பதவியேற்பு எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
-(3)




