காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களாகிய நாங்கள் உங்கள் கவனத்தையும் எங்கள் கடினமான போராட்டத்திற்கு ஒரு ஆறுதலையும் கேட்கிறோம்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியுள்ள கடிதத்தில் நன்கு அனுபவம் வாய்ந்த, பரிவுணர்வுள்ள ஒருவர் சுதந்திர உலகின் தலைவராக இருப்பதற்காக தாங்கள் காத்திருந்ததாக தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து புதிய அமெரிக்க ஜனாதிபதியை வாழ்த்தும் முகமாக நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் பைடனின் புகைப்படத்தை தாங்கிய பதாகையையும் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையின் கொடிகளையும் உறவினர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களாகிய நாங்கள், உங்கள் கவனத்தையும் எங்கள் கடினமான போராட்டத்திற்கு ஒரு ஆறுதலையும் கேட்கிறோம் என தெரிவித்துள்ளனர்.மேலும், கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிக்க விரைவில் ஜோ பைடனின் உதவியைக் கேட்போம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(15)





