வைரலாகும் புகைப்படம் கீர்த்தி சுரேசுடன் நடிக்கும் இயக்குனர் செல்வராகவன்
தமிழ் திரையுலக முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். தனுசின் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமாகி 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை கொடுத்தார். தற்போது நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி ஆகிய படங்களை இயக்கி வருகிறார். அடுத்து அவர் நடிகர் அவதாரம் எடுக்கிறார். சாணிக் காயிதம் என்ற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் வருகிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இருவரும் குத்தவைத்து உட்கார்ந்து இருப்பது போன்ற போஸ்டரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த போஸ்டர் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இருவரும் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதாக பலரும் பாராட்டி உள்ளனர். படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.(15)




