செய்திகள்

கொரோனா காலத்து தமிழினத் துரோகிகளும் எதிரிகளும்

செ. செந்தில்
கோத்தபாயாவின் இராணுவ அரசின் எடுபிடிகளாக வடமாகாண ஆளுநரும், சுகாதார உயரதிகாரிகளும் செயற்படுகின்றனர். கோப்பாயில் தென்பகுதியிலுள்ள கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு உட்படுத்தல் முற்றிலும் ஓரு சமூக விரோதச் செயலாகும்.

போதைவஸ்துக்கு அடிமையான கொரோனா நோயாளர்கள் கோப்பாயில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் சட்டவிரோதமான செயல்களுக்காக யாழ்ப்பாணச் சமூகவிரோதிகளுடன் ஒன்றித்து உள்ளனர்.

கொரோனா வடிவில் தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிங்களத்தின் செயற்பாட்டுக்கு முற்றுமுழுதான மக்கள் எதிhப்பினை நாம் வெளிக்காட்டுவோம். மாவீரர் நினைவுகூர கொரோனா தடை. ஆனால் கொரோனா நோயாளருக்கு மது உபசாரம். யாழ் மாவீரர் துயிலும் இல்லம் முன்றலில். நீதி தேவதையே கண் திறவாயோ.

கொரோனா தடுப்பு என்ற பெயரில் தமிழினத்தின் அடக்கு முறையை முழுமையாக உடைத்தெறிவோம். கொரோனா தொடர்பாக தமிழ்மக்கள் மீது தொடரும் அடக்கு முறைக்கு உதாரணமே வடபகுதியில் அமைக்கப்படும் தனிமைப்படுத்தல் முகாம்களும், சிகிச்சை நிலையங்களும். இதற்கு எதிராக குரல் கொடுக்காத பாராளுமன்ற உறுப்பினர்களை வன்iமாக கண்டிக்க வேண்டிய தருணத்தில் தமிழினம் உள்ளது.