நுவரெலியாவில் குடியிருப்புப் பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததில் 28 குடும்பங்கள் இடம்பெயர்வு
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட டயகம வேவர்ள்ளி தோட்டத்தில் 23 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பெய்த கடும்மழை காரணமாக குடியிருப்புப் பகுதியில் உள்ள ஆற்றுநீர் பெறுகெடுத்ததால் வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்ததால் 28 குடும்பங்களை சேர்ந்த 126 பேர் தோட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும் பிரதேச செயலகமும் வழங்கி வருகின்றது. அத்தோடு இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெய்த மழை காரணமாக பெறுமதி மிக்க சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
இதே வேளை குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் கூரைத்தகடுகள் சேதமடைந்து காணப்படுவதால் மழைநீர் வீட்டினுள் வடிவதாக இவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துத் தருமாறு மலையக அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்தபோதிலும் எவரும் முன்வரவில்லை என இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.




