செய்திகள்

உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது என்பது எமது அடிப்படை உரிமை – சீ.வீ.கே.சிவஞானம்

திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரை யாழ். பொலிஸார் கைது செய்த சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது என்பது எமது அடிப்படை உரிமை, அதிலும் அகிம்சை வழியில் எமது இன விடுதலைக்காக உண்ணா நோன்பு இருந்து ஆகுதி ஆகிய தியாகி திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்துள்ளார்.

திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரை நேற்று வியாழக்கிழமை யாழ். பொலிஸார் கைது செய்த சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.(15)