செய்திகள்

தீ நுண்மித் தொற்றுப் பேரிடர் பொருளாதார மீட்சிக்கு ஆலயங்களும் பொது நிறுவனங்களும் ஈடுபட வேண்டும்

மருத்துவர் . சி. யமுனாநந்தா

தீ நுண்மிப் பெருந்தொற்றுக்கு பின்பான சமூகச் சூழலில் மக்கள் பொருளியல் ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். வேலை வாய்ப்பின்மை பொருட்களின் விலை ஏற்றம் என்பன பல்வேறு சமூக உளத் தாக்கங்களை ஏற்படுத்த வல்லன. இவற்றினை எதிர்கொள்ள எமது சமூகத்தை தயார்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

தென்னிந்திய திருத்தல யாத்திரை யாழ் குடா நாட்டிற்கும் விஸ்தரித்தல் பெருமளவு சுற்றுலா வருமானத்தை பெற்றுக் கொடுக்கும். யுhழ் குடா நாட்டில் உள்ள திருத்தலங்கள் பற்றிய விளம்பரங்கள் இந்தியாவில் பிரபல்யப்படுத்தப்படுவதனால் இந்தியாவிலிருந்து பெருமளவான இந்துக்கள் தமது விடுமுறை சுற்றுலா தலமாக யாழ்குடா நாட்டை மாற்ற முடியும.; தீ நுண்மிப் பேரிடருக்கு பின்பான சமூகத்தின் பொருளாதார மீட்சிக்கு எமது பிரதேசத்தின் நுண்நிதிய வளர்ச்சிக்கும் மக்களின் இயல்பு வாழ்விற்கும் புதிய வருவாய் ஈட்டும் எத்தனங்களில் நாம் ஈடுபடல் வேண்டும். நவீன உலக ஒழுங்கில் சுற்றுலா துறை மிகவும் முக்கியமான உலகியல் வர்த்தகம் ஆகும். இதனை எமது சமய கலாசாரத்தை பிரதி பலிக்கும் வகையில் மாற்றியமைப்பது எமது கடமையாகும்.

யுhழ்குடா நாட்டில் நாகர் கால வழிபாட்டுச் சின்னங்கள் நாகர் கோயில் இ வல்லிபுரம் இ மாவிட்டபுரம் இ நயினாதீவு ஆகிய தலங்களில் உள்ளன. குறிப்பாக திருப்பாற் கடலில் திருமாலின் சக்கரம் வல்லிபுர ஆழ்வார் கோயிலில் அமைந்துள்ளமை பெருமளவான இந்திய பக்தர்களை இங்கு வரவளைக்கும். அதே போல் ஆஞ்சநேயரினால் இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட சஞ்சீவ மலையின் எச்சங்கள் நெடுந்தீவில் உள்ளமை பற்றியும் சேது இராட்சிய சின்னங்கள் நெடுந்தீவில் உள்ளமை பற்றியும் உரிய முறையில் கலாசார சுற்றுலா வர்த்தகம் மேற்கொள்ளப்படல் அவசியம்.

எமது சமூகத்திற்கு தேவையான ஆதரவினை அந்தந்த பிரதேசங்களில் இயங்கும் ஆலயங்கள் கிராம முன்னேற்றச் சங்கங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அடுத்து வரும் மூன்று வருடங்களிற்கு கிராமிய விவசாய முதலீடுகளிற்கு ஊக்குவிப்பு வழங்கப்படல் வேண்டும். சிறு கைத்தொழில் முயற்சிகளிற்கு ஆதரவு வழங்கப்படல் வேண்டும். மாறாக பிரமாண்டமான கட்டடங்களோ விஸ்தீரணக் கட்டுமாணங்களிலோ முதலீடு செய்வதனால் சமூகத்தில் வறுமையில் உள்ளவர்களை மீட்க முடியாது போகும்.

எனவே சமய சமூக பெரியோர்களும் ஆலய நிர்வாக சபையினரும் தீ நுண்மித் தொற்றுக்கு பின்பான சமூக உள மேம்படுத்தலில் ஆக்க பூர்வமாக ஈடுபடல் வேண்டும். பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெறுமனே நிவாரணத்தினை வழங்காது சுய தொழில் முதலீட்டு உற்பத்திகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் வேலை வாய்ப்பினை உருவாக்கும் பலவேறு கைத்தொழில்களை உருவாக்கவேண்டும். தீ நுண்மிப் பேரிடர் காவு கொண்ட சமூக உளத்திலிருந்து மீள சமூக மூலதனம் இடல் மிகவும் இன்றியமையாதது ஆகின்றது. அதனை நன்கே வகுத்தல் எமது கடமையாகின்றது.