பருத்தித்துறையில் இருந்து இந்தியாவை நோக்கிய இலங்கையின் சீனத்தூதுவர் உணர்த்தும் இராஜதந்திர எச்சரிக்கை

சிவா செல்லையா
இந்தியா ஈழத்தமிழர்களுக்குச் செய்த அநீதிகளுக்கு இன்று அதுவே விடைகாணும் நேரம் வந்துவிட்டது. இவற்றின் மிகவும் இறுதியானதாக இலங்கையின் சீனத்தூதுவர், இந்தியாவிற்கு மிகவும் அண்மையில் உள்ள நகரான பருத்தித்துறையிற்கு உத்தியோகபூர்வ பயணத்தை இராணுவ மரியாதைகளுடன் மேற்கொண்டார். இற்றைக்கு 12 வருடங்களிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வட இலங்கையை இந்தியாவின் உதவியுடன் இலங்கை கைப்பற்றியதன்பின் இந்தியாவிற்கு ஏற்பட்ட இராஜதந்திர இராணுவத் தோல்விக்கு அப்பால் சீனாவின் ஓர் எச்சரிக்கையாகவும் இதனைக் கொள்ளல் வேண்டும்.
மேலும் சீனா உலகில் மேற்கொள்ளும் ஒருங்கியசமர் முனையில் தனது எதிரிகளை நேரில் கொல்லாது மறைமுகமாக நவீன நட்சத்திர யுத்தமுனையில் அழிக்கின்றது. இதற்கு இந்தியாவின் முப்படைத்தளபதியும் தப்பவில்லை என்ற உண்மையைச் சீனத்தூதுவர் சீனாவிற்கே உரிய பாணியில் பருத்தித்துறையில் நின்று வெற்றிப் பெருமிதத்துடன் வெளிப்படுத்திச் சென்றுள்ளார். சீனாவின் இராணுவ இராஜதந்திர அணுகுமுறையை இந்தியா கண்டுகொள்ளாதுவிடினும் ஈழத்தமிழர்கள் தமது அரசியல் எதிர்காலத்திற்காக அடுத்தபடி விழிப்புக்குத் தேவையான நிகழ்வாகக் கருத வேண்டும்.


