செய்திகள்

பொருளாதாரத் தளம்பல் நிலையில் சுகநலம் அமைதிக்கான பாலமாகத் திகழல்

மருத்துவர் சி.யமுனாநந்தா, பிரதிப் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலை
கடந்த இரு வருடங்களில் கோவிட் தொற்றின் காரணமாக சுகாதார சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தன. யாழ் குடா நாட்டினைப் பொறுத்தவரை தொற்று நோய்களில் புதிதாக 2022 இல் மூன்று நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக பயண முகவர்களால் ஆபிரிக்க நாடுகளில் தங்க வைக்கப்பட்டு மீளவும் நாட்டிற்கு திரும்பியவர்கள். யாழ் குடா நாட்டில் மலேரியா நோய் மீளவும் பரவாதிருப்பதற்கு யாழ்குடா நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் சுகாதார உதவியாளர்களை அமைய அடிப்படையில் வேலைக்கு அமர்த்த வேண்டும்.

காச நோய்க் கட்டுப்பாடும் கடந்த இரண்டு வருடங்களில் 20மூ பின்னடைவினைச் சந்தித்துள்ளது. தொழு நோய், பாலியல் நோய்க் கட்டுப்பாடும் பின்னடைவினைச் சந்தித்துள்ளது. கட்டாக் காலி நாய்களுக்கான விலங்கின் விசர்த் தடுப்பூசி போடுவதும் பின்னடைவினைச் சந்தித்துள்ளன. கடந்த இரு வருடங்களில் ஐந்து பேர் விசர் நாய்க் கடியில் இறந்துள்ளனர்.

தற்போதய சூழலில் முரண்நிலையினை அதிகரிக்க தொழிற் சங்க போராட்டங்களை நடாத்துதல் தவறானதாகும். மேலும் இன்னும் இரு வருடங்களுக்கு பொருளாதாரத் தளம்பல் நீடிக்கும். எனவே சுகநலம் சமாதானத்திற்கான பாலம் என்ற தொனிப்பொருளில் சகல மருத்துவ சேவையாளர்களும் பணிபுரிதல் அவசியம்.மேலும் அத்தியவசியமான மருத்துவச் சத்திர சிகிச்சைத் திரவியங்களை பாரதத்திலிருந்து பெறுவதற்கான அனைத்து வழிகளையும் நடைமுறைப்படுத்துவோம். குறுகிய அரசியல் நலன்களைப் புறம் தள்ளுவோம்.