செய்திகள்

சிறுவனை காணவில்லை

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோனாதோட்டத்தில் 17 வயதுடைய இளைஞன் செல்வராஜ் கிருஸாந்தன் (கிசோ) கடந்த 28.04.2015 அன்று காணாமல் போனதாக அவரின் பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 28 ம் திகதி காலை 9 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். கடந்த 7நாட்களாக வீடு திரும்பவில்லையென பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கும் தந்தையின் 071 6298059 என்ற தொலைப்பேசி இலக்கத்துக்கும் அறிவிக்குமாறு பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.