செய்திகள்
அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
அரச அலுவலகங்களில் பணி ஒதுக்கீடு இல்லாமல் அரச ஊழியர்களை பராமரிப்பதில் சிக்கல் நிலவுவதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
உரிய முறைக்கு புறம்பாக அரச சேவைக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் ஊடாக அரச சேவையில் மிகை ஏற்பட்டுள்ளதாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
-(3)




