செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பம்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரை விடுதலை செய்வது தொடர்பான பிரமாண பத்திரத்தில் அவர் சமீபத்தில் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்டுள்ளார்.இதனை ஜனாதிபதி செயலகம் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.(15)