பல பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம்!
மலையகத்தில் பல பகுதிகளிலும் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மண்சரிவு காரணமாக ஹட்டன் – நாவலப்பிட்டி பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை நிலவி வருகின்றது.
இந்த நிலையில் இன்று காலை கினிகத்தேனை நாவலபிட்டி பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஹட்டன் கண்டி, கினிகத்தேனை நாவலபிட்டி ஆகிய பிரதேசங்களுக்கான பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-(3)




