யாழில் நல்லிணக்க மையம் திறப்பு!
யாழ்ப்பாணம் பலாலி சந்தி பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே நேற்று (26) திறந்து வைத்தார்.
ஆரோக்கியம் நிறைந்த நோயற்ற சந்ததியினரை உருவாக்குவதற்கு இராணுவத்தின் பங்களிப்புடன் இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை உருவாக்கும் முகமாக இந்த நல்லிணக்க மையம் திறந்து வைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்ற பின் அவரது முதலாவது யாழ் மாவட்ட விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
-(3)




