செய்திகள்

யாழில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.அத்துடன் இந்தப் போராட்டத்தில் யாழ். பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா அலுவலகம் முன்பாகவே இந்தப் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டது.அதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.(15)