செய்திகள்

37 பொருட்கள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்!

சந்தைக்கு விநியோகிக்கப்படும் 37 பொருட்கள் தொடர்பிலும் அவற்றை விற்பனை செய்வது தொடர்பிலும் அதிவிசேட வர்த்தமானியானது நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

சந்தைக்கு பொருட்கள் வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை சீரமைப்பதற்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு, முட்டை, பால்மா , சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் பல பொருட்களை உள்ளடக்கியதாக இவ்வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்

-(3)