செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான அறிவித்தல்!

வெளியாகியுள்ள 2021 ஆம் ஆண்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுக்கமைய 2021-2022 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி  செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி விண்ணங்கள் ஏற்றுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் திரு.சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஊடாகவே விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-(3)