பண வீக்கம் பெருமளவில் அதிகரிப்பு!
இலங்கையில் பண வீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெருமளவில் அதிகரித்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணவீக்கம் 64.3% ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை உணவுப் பொருட்களின் விலை உயர்வு எனப்படும் உணவிற்கான பணவீக்கம் இம்மாத இறுதியில் 93.7% வரை அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை பதிவான விகிதங்களுடன் ஒப்பிடுகையில், பணவீக்கம் தற்போது பாரியளவில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-(3)




