செய்திகள்

கோட்டா நாடு திரும்பும் நாள் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அன்றைய தினம் மாலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜுலை 13 ஆம் திகதி மாலைதீவு ஊடாக அவர் சிங்கபூர் சென்று, அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருந்து பின்னர் அவர் அங்கிருந்து தாய்லாந்து சென்றிருந்தார்.

இந்நிலையில் இலங்கையில் அவருக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் நாடு திரும்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.