செய்திகள்

ரணிலின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சஜித் – டலஸ் அணிகள் எடுத்த முடிவு!

ஜனதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளது இருக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இதனை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவும் உறுதிப்படுத்தினார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவும் இன்று நடைபெறவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதை தவிர்க்க தீர்மானித்துள்ளது.

இதனை பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் உறுதிப்படுத்தினார்.

இன்று மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.

-(3)