செய்திகள்

யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று

1996 ஆம் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கழுத்தை நெறித்துபடுகொலை செய்திருந்தனர்.

இந்நிலையில் யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்று புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.(15)