செய்திகள்
19 ஆம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினம்!
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவை முன்னிட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டில் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
-(3)




