செய்திகள்

சிங்கப்பூரை வீழ்த்தி இறுதிப் போட்டியில் சம்பியனானது இலங்கை அணி!

2022 ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

இதன்போது சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கை வீரர்கள் வீழ்த்தினர்.

இதன்மூலம் ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது 6வது முறையாகும என்பது குறிப்பிடத்தக்கது.