கோழி இறைச்சி, முட்டை விலைகள் மேலும் உயரலாம்!
மின் மற்றும் நீர்க் கட்டண அதிகாரிப்பால் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் முதல் மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வற் வரியும் அதிகரித்துள்ளன.
இதனால் தாமும் உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர கூறியுள்ளார்.
அரசாங்கம் தலையிட்டு சலுகைகளை வழங்கினால் மட்டுமே விலையை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-(3)




