செய்திகள்

திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை!

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நடைபெறும் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செப்டம்பர் 19 அன்று அரசாங்கத்தால் சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாடசாலைகளுக்கும் குறித்த விடுமுறையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அன்றைய தினத்தை விடுமுறை தினமாக கருதி செயற்படுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

(3)