காரைநகர் கடற்கரையில் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: 10 பேர் கைது!
யாழ்ப்பாணம், காரைநகர் – கசூரினா கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பெண்ணொருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டு பெண்ணொருவரே இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் சம்பவத்தின் போது மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பில் காரைநகர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-(3)




