செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 84 பேர் கைது!
கொழும்பில் சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இருந்து டீன்ஸ் வீதியூடாக மருதானை நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்துவதற்காக சுகாதார அமைச்சுக்கு முன்பாக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித் துள்ளனர்.
இதன்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 84 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-(3)




