மஹிந்த தலைமையில் புதிய அரசியல் கூட்டணி!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசியல் கூட்டயொன்றை அமைப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சி மாநாட்டின் போது முக்கிய பல தீர்மானங்கள் அறிவிக்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகித்த அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்கால அரசியல் நோக்கத்தை கருத்திற்கொண்டு கூட்டணியின் கொள்கைக்கு முரணாக செயற்பட்டார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை பலவீனமடைய செய்தவர்கள் தற்போது புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்து தங்களின் அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.
பொதுஜன பெரமுனவின் கட்சி கொள்கையினை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை. எதிர்வரும் காலங்களில்; பொதுஜன பெரமுனவின் கொள்கையை மறுசீரமைத்து செயற்படுவோம் என்று கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
-(3)




