செய்திகள்

உக்ரைனின் மேலும் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க முடிவு!

உக்ரைனின் மேலும் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் முறையாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை இந்த நடவடிக்கை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகளின் பிரகாரம் ரஷ்ய அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மேற்கத்திய நாடுகள் இது தொடர்பான வாக்கெடுப்பை ஏற்க முடியாது என்று தெரிவித்து வருகின்றன.

இந்த வருடம் மார்ச் மாதம் முதல் ரஷ்யப் படையினர் உக்ரைனில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-(3)