செய்திகள்

ரஜினியின் மகள் செளந்தர்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவுக்கு நேற்று இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் சினிமா தயாரிப்பு, டைரக்ஷன் என பல்வேறு வேலைகளில் பிஸியாக இருந்த சௌந்தர்யா, குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தாய்மைப் பேறு அடைந்த சௌந்தர்யாவுக்கு நேற்று இரவு ஆண்குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன் மூலம் இரண்டு பெண் வாரிகளைக் கொண்ட ரஜினிக்கு மூன்றாவது பேரன் பிறந்துள்ளார்.