செய்திகள்

அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவியேற்பர்?

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தில் மேலும் 10 பேர் இன்று (03) பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பதவிப் பிரமாணம் செய்யும் நேரம் குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்மொழியப்பட்ட போதிலும் அவர்களில் சிலர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

-(3)