நடிகர் தர்ஷன் தர்மராஜின் இறுதிக் கிரியை புதன்கிழமை!
இலங்கை நடிகர் தர்ஷன் தர்மராஜின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை அவரது சொந்த ஊரான ரக்குவானையில் நடைபெற உள்ளது.
அவரது உடல் தற்போது பொரளையில் உள்ள தனியார் மலர் சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று காலை காலமானார்.
தர்ஷன் தர்மராஜ் இறக்கும் போது அவருக்கு வயது 41.
சரோஜா, பிரபாகரன், மச்சாங், மாதா, இனியவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், பல சிங்கள நாடகங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் மிகவும் பிரபலமான “சுனாமி” திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தர்ஷன் தர்மராஜ் இன்றும் 05 நாட்களில் திரையிடப்படவுள்ள “பிராண” படத்திற்கும் தனது நடிப்பில் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
தர்ஷன் தர்மராஜ் பல திரைப்பட விழாக்களில் தனது நடிப்புத் திறமைக்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார், மேலும் தெரண திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.




