செய்திகள்
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, முன்னதாக, லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ எடை கொண்ட வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 113 ரூபாவால் குறைத்திருந்தது.இந்நிலையில் 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவுக்கு இடைப்பட்டதொரு தொகையினால் குறைக்கப்படவுள்ளது.(15)




