செய்திகள்

யாழ்.கோண்டாவில் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் தொடருந்துடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் தொடருந்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்தானது இடம்பெற்றது.இந்தச்சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.(15)