செய்திகள்

எகிப்து போகிறார் ஜனாதிபதி ரணில்!

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் எகிப்து செல்லவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைதீவின்  சபாநாயகருமான மொஹமட் நஷீட்  மற்றும் நோர்வேயின் முன்னாள் சுற்றாடல் மற்றும் காலநிலை அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதியின் சுற்றாடல் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தனவும் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

-(3)