செய்திகள்

காலிமுகத்திடலில் நேற்று நடந்துகொண்ட விதம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களில் உயிரிழந்தவர்களை காலிமுகத்திடலில் அமைதியான முறையில் நினைவுக்கூர முயற்சித்தவர்களிடம் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் தொடர்பில் தகவல்களை வழங்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தங்களது பிள்ளைகளுடன் காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தவர்களிடம் பொலிஸார் கடுமையாக நடந்துக்கொண்டு அவர்களது மனித உரிமைகளை மீறியுள்ளதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினரால் பொலிஸாருக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.(15)