பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் – காலி முகத்திடலில் பதற்றமான சூழல்
பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக காலி முகத்திடலில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக காலி முகத்திடல் நிலைய வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காலிமுகத்திடலில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பொலிஸாருக்கும் சட்டத்தரணிகளின் போராட்டத்தில் கலந்து கொண்ட இளம் ஊடகவியலாளர் சங்கத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்த விதம் மற்றும் அங்கிருந்த சிறார்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு கீழ் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சட்டத்தரணிகள் சங்கம் அமைதி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.(15)




