செய்திகள்
யாழ். மாவட்டத்தில் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் கைது
நீண்ட காலமாக யாழ். மாவட்டத்தில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய்பொலிசார் தெரிவிக்கின்றனர்.28 வயதுடைய கோப்பாய் செல்வபுரத்தைச் சேர்ந்த குறித்த நபர் நீண்ட காலமாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் கோப்பாய் பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.(15)




