செய்திகள்

கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று இரவு முதல் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (16) காலை 10.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 02, 03, 04, 05, 07, 08, 09 மற்றும் 10 ஆகிய பகுதிகளுக்கு குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும்.

கொழும்பில் நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் திட்டம் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

-(3)