செய்திகள்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் 47 பேர் காயம்

முகமாலையில் இடம்பெற்ற விபத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் 47 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் பயணித்துக்கொண்டிருந்தபேருந்தின் மீது டிப்பர் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தானது கனரக வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் 47 இற்கும் மேற்பட்டோர் காயப்பட்டதாகவும் 15 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலும் 10 பேர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடதக்கது.(15)