செய்திகள்

”அரசாங்கம் அனைத்து வழிகளிலும் வங்குரோத்தடைந்துள்ளது”

அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் சித்தாந்த ரீதியாகவும் வங்குரோத்து நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நகைச்சுவை நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மீது புதிய வரிச்சுமையை சுமத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், புதிய வரிகள் மக்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தனிநபர்கள் வைத்திருக்கும் டொலர்களை மீட்டெடுக்க முடியும் என்றும், வரிகளை அதிகரிப்பதால் மாத்திரம் வருமானத்தை அதிகரிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசியல் இலாபம் பெறுவதற்குப் பதிலாக, சிறுவர்களின் கல்வியை உயர்த்துவதற்கு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-(3)