செய்திகள்

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் காரைநகரில் கைது

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைதான மீனவர்களையும் அவர்களின் படகினையும் மேலதிக நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் கடற்படையினர் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த போதே கடற்படையினர் கைது செய்துள்ளனர்.(15)