பொன்னியின் செல்வன் படத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்த்து ரசித்தார்
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன்.இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.
வசனம் – ஜெயமோகன், இசை – ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன், கலை – தோட்டா தரணி. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் மனைவியும் இன்று மாலை கொழும்பிலுள்ள திரையரங்கொன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனும் பங்கேற்றிருந்தார்.(15)





