மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அயர்லாந்து – மேற்கிந்தியத் தீவுகள் டி20 உலககோப்பையிலிருந்து வெளியேறியது
தொடக்க வீரரர்களாக பால் ஸ்டிர்லிங் ,ஆண்டி பால்பிர்னி ஆகியோர் களமிறங்கினார். தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த இருவரும் பந்துகளை சிக்ஸர்,பவுண்டருக்கு பறக்க விட்டனர்.இதனால் அயர்லாந்து அணியின் ரன் ரேட் அதிரடியாக உயர்ந்தது.6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக விளையாடிய ஆண்டி பால்பிர்னி 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் லோர்கன் டக்கர் களமிறங்கினார். மறுமுனையில் பால் ஸ்டிர்லிங் அதிரடி அரைசதம் அடித்தார். லோர்கன் டக்கரும் அவரது பங்கிற்கு பவுண்டரி ,சிக்ஸர் பறக்க விட்டார்.வெஸ்ட் இண்டீஸ் அணியால் 2வது விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இறுதியில் 17.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.
பால் ஸ்டிர்லிங் 66 ரன்களுடன் ,லோர்கன் டக்கர் 45 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியால் அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி டி20உலககோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது.இரண்டு தடவைகள் உலக சம்பியனான மேற்கிந்தியத் தீவுகளை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த அயர்லாந்து, ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.(15)





