செய்திகள்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் இன்று சனிக்கிழமை தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கை தமிழர்கள் மன்னாரில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் தவித்து வருவதாக கிடைத்த தகவலையடுத்து மரைன் போலீசார் படகில் சென்று அவர்களை மீட்டு தனுஷ்கோடி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்(15)




