செய்திகள்

25 ஆம் திகதி சூரியக் கிரகணம்: எங்கெல்லாம் காணலாம்?

பகுதியளவிலான சூரிய கிரகணம் வரும் 25ம் திகதி நிகழவிருக்கிறது.
இந்த சூரிய கிரகணத்தை ரஷ்யாவின் தெற்குப் பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்ரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள், ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களிலிருந்து காணலாம்.

உலக அளவில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மதியம் 02:19 மணிக்கு ஆரம்பித்து, மாலை 06:32 மணிக்கு முடியும். ரஷ்ய நாட்டின் மத்தியப் பகுதிகளில் சூரியனை 80 விழுக்காடு சந்திரன் மறைக்கும்.

சென்னையில் இந்திய நேரப்படி மாலை 05:14 மணிக்கு கிரகணம் லேசாக ஆரம்பிக்கும். 05:44 மணிக்கெல்லாம் முடிந்துவிடும். சூரியன் அன்று 05:44 மணிக்கு மறையும். அதிகபட்சம் 8 விழுக்காடு மட்டுமே சூரிய மறைப்பு இருக்கும். இதுவும் சூரியன் மறைகையில்தான். எனவே, மிகக்குறுகிய காலம் மட்டும் மேற்கு வானில் சூரியன் மறையும்முன் இந்நிகழ்வு நடக்கிறது. கிரகணம் ஆரம்பிக்கும்போது தொடுவானிலிருந்து சுமார் 7 டிகிரி உயரத்தில் மட்டுமே சூரியன் காணப்படும்.

சூரியனை கிரகணத்தின்போதோ, சாதாரணமாகவோ வெறுங்கண்களாலோ அல்லது தொலைநோக்கி அல்லது பைனாகுலர் மூலமாகவோ காணக்கூடாது. அப்படிச் செய்தால் கண்பார்வையை இழக்க நேரிடும். சூரியஒளியை ஒரு சிறிய (5 எம்.எம்) துளையிட்ட அட்டை ஒட்டப்பட்ட கண்ணாடிமூலம் இருண்ட அறையில் பாய்ச்சி சூரியன் பிம்பத்தையும் கிரகணத்தையும் காணலாம்.

-(3)