செய்திகள்

பிரதமர் ரிஷி சுனக் புதிய அமைச்சரவையை நியமித்தார்!

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கினால் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் 57ஆவது பிரதமராக ரிஷி சுனக் நேற்று(25) கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்த வருடத்திற்குள் பிரித்தானியாவில் தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய பிரதமராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ், தமது பதவியை கடந்த வியாழக்கிழமை இராஜினாமா செய்தார்.

நேற்று(25) மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்த ரிஷி சுனக், பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதல்தடவையாக பிரித்தானிய பிரதமராகியுள்ளார்.
-(3)