இலங்கையில் இவ்வருடம் இதுவரை 50 பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று
நாட்டில் எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விடவும், இவ்வருடம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றாளர்களில் பெரும்பாலானோர் இளம் சமூகத்தினர் எனத் தெரியவருகின்றது. நாட்டில் இவ்வருடம் கடந்த 9 மாதங்களில் 342 எயிட்ஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் இவர்களில் அடங்குகின்றனர் என்றும் இவ்வருடம் இதுவரை 50 பல்கலைக்கழக மாணவர்கள் எச்.ஐ.வி. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.(15)




