செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவை கொல்ல முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

களுத்துறை சிறைச்சாலையில் வைத்து 1998 ஆம் ஆண்டு தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கூரிய ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் இருவருக்கு தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 15 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 22 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அத்துடன், ஒவ்வொரு பிரதிவாதியும் தலா 100,000 ரூபாயை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

-(3)